BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Thursday, October 30, 2008

நினைவில் மட்டுமே




• ஆழ்ந்த உறக்கத்தில் அப்பா
துக்கத்தில் ஆழ்ந்து விட்ட வீடு
சிரித்துக் கொண்டே நுழைந்தன
மலர்வளையங்கள்

• அறையில் அழுது
கொண்டிருக்கும் அம்மா
சுவரில் மௌனமாய் சிரித்துக்
கொண்டிருக்கும் அப்பா
தன் நெற்றிப் பொட்டை
அப்பாவின் நிழல் படத்தில்
இடும் அம்மா.

• இன்றும் அப்பாவின் உழைப்பை
ஞாபகப்படுத்திக் கொண்டே
இருக்கின்றன
வாசலில் கிடக்கும்
அவரின் தேய்ந்த செருப்புகள்

• பள்ளிக்கு வழியனுப்பி வைத்த
அப்பாவை
முட்கள் குத்திய வலியோடு
கல்லறைக்கு வழியனுப்பி
நின்றன கால்கள்

• நிம்மதியை எடுத்துக் கொண்டு
நிம்மதியாய் உறங்கும் அப்பா
கனவில் வந்து போனாலும்
வருவது அப்பா என்பது தான் நிஜம்.

• உரிமையோடு அழைக்க முடியாதபடி
இன்று நான் இழந்து விட்ட
ஒரு வார்த்தை "அப்பா"

13 comments:

MSK / Saravana said...

மேகா.. என்ன சொல்றதுன்னே தெரியல.. மனசு ரொம்ப கனமா இருக்கு..
இந்த கவிதை கற்பனையா இருக்கனும்..
இல்லாத பட்சத்தில் நாங்க இருக்கிறோம்.. கவலை படாதீங்க..

ஜியா said...

:((

Vera enna solrathunnu theriyala :((

ரகசிய சிநேகிதி said...

==================================
Saravana Kumar MSK said...
மேகா.. என்ன சொல்றதுன்னே தெரியல.. மனசு ரொம்ப கனமா இருக்கு..
இந்த கவிதை கற்பனையா இருக்கனும்..
இல்லாத பட்சத்தில் நாங்க இருக்கிறோம்.. கவலை படாதீங்க..
===================================
====>கற்பனையில் இந்த அளவுக்கு வலிகள் வருவதில்லை Friend.

"இல்லாத பட்சத்தில் நாங்க இருக்கிறோம்.. கவலை படாதீங்க.."

இந்த வரிகளைக் கண்டு ஆறுதல் கொள்கிறேன்.நன்றி சரவணக் குமார்

எத்தனை குழந்தைகள் தன் தந்தையே யார் என்று தெரியாமல் தவிக்கிறார்கள்; ஏங்குகிறார்கள். அவர்களின் நிலையை என்னவென்று சொல்வது? என்னைப் பொறுத்தவரையில் எல்லா உறவுகளுமே பொக்கிஷம் போன்றவை தான். இணையத்தில் எனக்கு கிடைத்த உங்களைப் போன்ற நல்ல நண்பர்களையும் சேர்த்துதான்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

உரிமையோடு அழைக்க முடியாதபடி
இன்று நான் இழந்து விட்ட
ஒரு வார்த்தை "அப்பா"

ஆமாம்.
எனக்கு புரிகிறது இந்த வலி.
ஆமாம் என்னால் இப்போது யாரையும் இப்படி அழைக்கமுடியவில்லை.

இது உங்களின் கற்பனை கவிதையா, காணும் நிஜமா.

முடிந்தால் எனது இந்த பதிவினைப் படிக்கவும்.
http://amirdhavarshini.blogspot.com/2008/10/blog-post_21.html

Ravishna said...

மேஹா உங்களுடைய ஒவ்வொரு வரிகளுமே
வேதனையை கொட்டித் தீர்கின்றது.....
இது வெறும் கவிதைக்கு மட்டும் இருக்கட்டும்
என்று என் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

நட்புடன்,
ரவிஷ்னா

Unknown said...

We feel with u in ur loss,definitely u r great in sharing.

MSK / Saravana said...

//எத்தனை குழந்தைகள் தன் தந்தையே யார் என்று தெரியாமல் தவிக்கிறார்கள்; ஏங்குகிறார்கள். அவர்களின் நிலையை என்னவென்று சொல்வது? என்னைப் பொறுத்தவரையில் எல்லா உறவுகளுமே பொக்கிஷம் போன்றவை தான். இணையத்தில் எனக்கு கிடைத்த உங்களைப் போன்ற நல்ல நண்பர்களையும் சேர்த்துதான்..//

நிச்சயம் நான் இருப்பேன். கவலை படாதீங்க. Life goes on..

நவீன் ப்ரகாஷ் said...

//உரிமையோடு அழைக்க முடியாதபடி
இன்று நான் இழந்து விட்ட
ஒரு வார்த்தை "அப்பா" //

உணரமுடிகிறது... :(((

நாடோடி இலக்கியன் said...

//கற்பனையில் இந்த அளவுக்கு வலிகள் வருவதில்லை Friend.//

என்ன சொல்றதுன்னு தெரியல,வார்த்தைகள் இல்லை.
கவலை வேண்டாம் நாங்கள் இருக்கின்றோம் தோழி.

sprajavel said...

வலிக்கிறது... வேறென்ன சொல்ல தெரியவில்லை

U.P.Tharsan said...

உணர்ந்து கொள்ள மட்டும்தான் முடியும். Mh.... :-(( soon feel fresh

Anonymous said...

ungalin izhapirku varundugiren:-(

-siva

யாத்ரா said...

நீங்க இன்று மெயிலில் அப்பா பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள் அல்லவா, இந்தக் கவிதையின் முதல் வரியிலிருந்து என்னை என்னால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மனமும் கண்களும் பொங்கிக் கொண்டேயிருக்கிறது.

அப்பா மீதான உங்கள் நேசம் முழுமையாகப் புரிகிறது. உங்களை மகளாகப் பெற்றதற்கு, உங்க அப்பா ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.

வலியை எப்படி, அந்த வலி பன்மடங்காக ஆகிற அளவுக்கு வார்த்தைல வடிச்சிருக்குங்க. என்னால முடியலப்பா, உங்க கவிதைகள் மேலும் மேலும் என்னை அழவைக்கிறது.

//உரிமையோடு அழைக்க முடியாதபடி
இன்று நான் இழந்து விட்ட
ஒரு வார்த்தை "அப்பா"//

நிஜமா என்னால தாங்கமுடியலப்பா,,,

:(((