BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Friday, September 19, 2008

நிகழ்ந்தாக வேண்டும்

நிகழ்ந்தாக வேண்டும்
என்ற நிபந்தனைகளும்

நடந்தாக வேண்டும்
என்ற வற்புறுத்தல்களிலும்
நடக்க தொடங்கும்
கால்கள்

பொழுது விடிந்ததினால்
விரும்பாமல் விழித்து கொள்ளும்
கண்களில்
மிச்சமிருப்பது வெறுமையே

எதிர்ப்படும் சிலருக்காக
அவ்வப்போது உதிர்ந்துவிடும்
புன்னகையை
விரித்தி பார்த்தால்

உண்மையில் எதுமே இல்லை
என்று புலப்படும் ஒரு
கூற்றில் குறுகி போயுள்ளது
இந்த இரவல் வாழ்க்கை!

முடிந்த பொழுதில்
மலர போகிறது
நாளை என்றொரு பொழுது
இதே வண்ணத்தில்
நீயும் நானும் பூசிக் கொள்ள

மீண்டும்
நிகழ்ந்தாக வேண்டும் என்ற
நிர்பந்தத்தோடு
சில நிபந்தனைகளோடு

24 comments:

Ravishna said...

/*இதே வண்ணத்தில்
நீயும் நானும் பூசிக் கொள்ள

மீண்டும்
நிகழ்ந்தாக வேண்டும் என்ற
நிர்பந்தத்தோடு
சில நிபந்தனைகளோடு */

Superb Line MEHA.I like it most.I think this will be one of your master piece.Good MEHA.Keep going.We are all congratulate you for this.

Regards,
Ravi Shanmuga Nagaraj.P

Athisha said...

கவிதை அருமையாக இருக்கிறது தோழி

எதிர்ப்படும் சிலருக்காக
அவ்வப்போது உதிர்ந்துவிடும்
புன்னகையை
விரித்தி பார்த்தால்

உண்மையில் எதுமே இல்லை
என்று புலப்படும்

எவ்வளவு உண்மை... ;-)

varupooja@gmail.com said...

ரகசிய சிநேகிதி...
கவிதையில் விளையாடுகிறாய்... வார்த்தையில் கலக்குகிறாய்...
உன் கவிதைகளும் எத்தனை அழகு...! படித்தேன்... உன் கவிதையின் ரசிகரானேன்...!

RAGASIYA SNEGITHY rasigan...
SENTHIL KUMARAN

தமிழ் said...

அருமை

MSK / Saravana said...

இந்த கவிதை நல்லா இருக்கு..


Actualla நான் எழுதி இருக்க வேண்டிய கவிதை இது..

ரகசிய சிநேகிதி said...

===================================
Ravishna said...
Superb Line MEHA.I like it most.I think this will be one of your master piece.Good MEHA.Keep going.We are all congratulate you for this.
===================================
நன்றி ரவிஷ்னா. மிக்க மகிழ்ச்சி. மீண்டும் வாருங்கள்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//எதிர்ப்படும் சிலருக்காக
அவ்வப்போது உதிர்ந்துவிடும்
புன்னகையை
விரித்தி பார்த்தால்

உண்மையில் எதுமே இல்லை
என்று புலப்படும்//

தொட்டது மனதை! வாழ்த்துக்கள் சிநேகிதி!

MSK / Saravana said...

என்ன மேகா, பிசியா??

உங்களையும் காணோம்.. பதிவையும் காணோம்..

Sathis Kumar said...

அன்பரே,

மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கான ஒரு திரட்டியை ஏற்படுத்தியுள்ளேன்.

அதனைக் கண்ணுற்று குறை நிறைகளைச் சுட்டிக் காட்டி உதவுவீர்கள் என நம்புகிறேன்.

http://www.pageflakes.com/Valaipoongaa/

MSK / Saravana said...

எங்கே ஆளையே காணோம்??
பதிவையும் காணோம்..

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாவ்

நிதர்சனமான உண்மை ஒவ்வொரு வரியிலும்

ஜியா said...

arumaiyaana kavithai...

ரகசிய சிநேகிதி said...

===================================
AMIRDHAVARSHINI AMMA said...
வாவ்

நிதர்சனமான உண்மை ஒவ்வொரு வரியிலும்
===================================
======>முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அமிர்தவர்ஷினி அம்மா .மீண்டும் வாருங்கள்,

ரகசிய சிநேகிதி said...

==================================
ஜி said...
arumaiyaana kavithai...
===================================
=====> நன்றி ஜி. மிக்க மகிழ்ச்சி. மீண்டும் வாருங்கள்.

ரகசிய சிநேகிதி said...

===================================
அதிஷா said...
எவ்வளவு உண்மை... ;-)
===================================
=======> வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அதிஷா.. மீண்டும் வாருங்கள்!

ரகசிய சிநேகிதி said...

===================================
varupooja@gmail.com said...
ரகசிய சிநேகிதி...
கவிதையில் விளையாடுகிறாய்... வார்த்தையில் கலக்குகிறாய்...
உன் கவிதைகளும் எத்தனை அழகு...! படித்தேன்... உன் கவிதையின் ரசிகரானேன்...!

RAGASIYA SNEGITHY rasigan...
SENTHIL KUMARAN
===================================
======> வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி செந்தில். மீண்டும் வாருங்கள்

ரகசிய சிநேகிதி said...

===================================
திகழ்மிளிர் said...
அருமை
===================================
======> மிக்க நன்றி திகழ்மிளிர்.. மீண்டும் வாருங்கள்.

ரகசிய சிநேகிதி said...

===================================
Saravana Kumar MSK said...
இந்த கவிதை நல்லா இருக்கு..


Actualla நான் எழுதி இருக்க வேண்டிய கவிதை இது..
===================================
======> நன்றி சரவணக் குமார்.... இருந்தாலும் பரவாயில்லை.. இதே சாயலில் நீங்கள் வேறு ஒரு கவிதை எழுதுங்களேன்..

ரகசிய சிநேகிதி said...

===================================
Saravana Kumar MSK said...
என்ன மேகா, பிசியா??

உங்களையும் காணோம்.. பதிவையும் காணோம்..
==================================
=====> yes little bit busy friend..

Unknown said...

arumai

இராவணன் said...

//இதே வண்ணத்தில்
நீயும் நானும் பூசிக் கொள்ள
மீண்டும்
நிகழ்ந்தாக வேண்டும் என்ற
நிர்பந்தத்தோடு
சில நிபந்தனைகளோடு
//

அருமை.

நிலாரசிகன் said...

வாழ்த்துகள்.

Sakthi said...

எழுதும் கரங்கள் உங்களுடையது

deepa said...

வெறுமையின் உன்னதத்தை உணர்த்தும் வரிகள் .......