BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Tuesday, September 2, 2008

சிதறிய பிம்பங்கள்

 மனசாட்சியை விலங்கிட்டு
கடவுளைச் சிறைட்ட
உன் ரேகையில் பதிந்து
கிடந்தது ஒரு வாசகம்
துரோகம் என்று

 அதிகாலை மழை
போர்வைக்குள்
ஒளிந்து கொள்ளும்
உன் நினைவுகள்
தீப்பற்றி எரிகிறது
என் தெரு வீடுகள்

 தென்றலின் வருகைக்காக
திறந்து வைத்த ஜன்னலில்
ஓலமிட்டு நிற்கிறது
நரி ஒன்று

 ஒவ்வொரு வரியிலும்
கறைப்படியும் உன்
நினைவுகளைச்
சொல்ல வரும் கவிதை
இறக்கிறதா ? பிறக்கிறதா?

26 comments:

Ravishna said...

/* ஒவ்வொரு வரியிலும்
கறைப்படியும் உன்
நினைவுகளைச்
சொல்ல வரும் கவிதை
இறக்கிறதா ? பிறக்கிறதா? */

வலிகளை கூறுகின்ற அருமையான வரிகள்.....
சரவண குமாரின் தோழி என்பதை நிரூபிக்கும் விதமாக உள்ளது.

குறிப்பு:
நண்பர் சரவண குமார் கோபித்துக் கொள்ள வேண்டாம்...

--ரவிஷ்னா

MSK / Saravana said...

பின்னீட்டீங்க..

முத்து முத்தாய் கவிதைகள்.

MSK / Saravana said...

கவிதைகள் முழுதும் வலிகள்..

//ஒவ்வொரு வரியிலும்
கறைப்படியும் உன்
நினைவுகளைச்
சொல்ல வரும் கவிதை
இறக்கிறதா ? பிறக்கிறதா?//

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

//அதிகாலை மழை
போர்வைக்குள்
ஒளிந்து கொள்ளும்
உன் நினைவுகள்
தீப்பற்றி எரிகிறது
என் தெரு வீடுகள்
//

அதிகாலை மழையும் உடன் கலக்கும் நினைவுகளும்தான் எத்துனை அழகு :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

ஆழமான அர்த்தங்கள் மறைந்த வரிகளாய் கவிதை அருமை!

Naveen Kumar said...

உணர்வுபூர்வமான நல்ல கவிதை:-)

VIKNESHWARAN ADAKKALAM said...

எல்லா துணுக்குகளும் ஒரே பாணியில் வருவதை போல் இருக்கிறது.

ரகசிய சிநேகிதி said...

===================================
Ravishna said...

வலிகளை கூறுகின்ற அருமையான வரிகள்.....
சரவண குமாரின் தோழி என்பதை நிரூபிக்கும் விதமாக உள்ளது.

குறிப்பு:
நண்பர் சரவண குமார் கோபித்துக் கொள்ள வேண்டாம்...
===================================
--ரவிஷ்னா
பின்னூட்டத்திற்கு நன்றி ரவிஷ்னா.. மீண்டும் வருங்கள்

(பி.கு: ஏன் நண்பர் சரவணக் குமார் கோபித்துக் கொள்ள வேண்டும் ரவிஷ்னா? புரியவில்லை????? )

ரகசிய சிநேகிதி said...

===================================
Saravana Kumar MSK said...
பின்னீட்டீங்க..

முத்து முத்தாய் கவிதைகள்.
===================================
வருகைக்கும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சரவணக் குமார். மீண்டும் வாருங்கள்..

ரகசிய சிநேகிதி said...

===================================
sathish said...
ஆழமான அர்த்தங்கள் மறைந்த வரிகளாய் கவிதை அருமை!
===================================
வருகைக்கும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சதீஷ். அதோடு பிழையைத் திருத்தியதற்கும் என் நன்றிகள். மீண்டும் வாருங்கள்

Ravishna said...

நான் கூறியது என்னவென்றால் சரவண குமாரின் இயல்பே சோக கவிதைகள் எழுதுவதுதான்....அந்த பாணியில் நீங்களும் இப்பொழுதெல்லாம் சோக கவிதைகள் எழுதுகிறீர்கள்...ஆகையால் தான் நான் சரவண குமார் கோபித்துக் கொள்ள வேண்டாம் என்று கூறினேன்.

--ரவிஷ்னா

ரகசிய சிநேகிதி said...

=================================
Naveen Kumar said...
உணர்வுபூர்வமான நல்ல கவிதை:-)
==================================

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க மகிழ்ச்சி .. நன்றி .. மீண்டும் வாருங்கள் நவீன் குமார்

ரகசிய சிநேகிதி said...

===================================
VIKNESHWARAN said...
எல்லா துணுக்குகளும் ஒரே பாணியில் வருவதை போல் இருக்கிறது.
===================================
அப்படியா? :)

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.. மீண்டும் வாருங்கள்

MSK / Saravana said...

//சரவண குமாரின் தோழி என்பதை நிரூபிக்கும் விதமாக உள்ளது.//

இதெல்லாம் பெரிய வார்த்தை..


//குறிப்பு:
நண்பர் சரவண குமார் கோபித்துக் கொள்ள வேண்டாம்... .//

//(பி.கு: ஏன் நண்பர் சரவணக் குமார் கோபித்துக் கொள்ள வேண்டும் ரவிஷ்னா? புரியவில்லை????? )//

அதானே.. எனக்கும் புரியவில்லை.. நான் ஏன் கோபித்து கொள்ள வேண்டும்??
சந்தோஷப்படத்தான் வேண்டும்..

MSK / Saravana said...

//நான் கூறியது என்னவென்றால் சரவண குமாரின் இயல்பே சோக கவிதைகள் எழுதுவதுதான்....அந்த பாணியில் நீங்களும் இப்பொழுதெல்லாம் சோக கவிதைகள் எழுதுகிறீர்கள்...ஆகையால் தான் நான் சரவண குமார் கோபித்துக் கொள்ள வேண்டாம் என்று கூறினேன்.//

ஓகே.. ஓகே..

நானே அதை சொல்ல வேண்டும் கேட்க வேண்டுமென்றிருந்தேன் ..

என்ன மேகா.. ரொம்ப சோகமான கவிதைகளாகவே இருக்கே..??

நவீன் ப்ரகாஷ் said...

//ஒவ்வொரு வரியிலும்
கறைப்படியும் உன்
நினைவுகளைச்
சொல்ல வரும் கவிதை
இறக்கிறதா ? பிறக்கிறதா? //

என்ன கோபம் ரகசிய ஸ்னேகிதி..? :))

பிறந்த உறவுக்கு இறப்பும்
உண்டென கூற வருகிறீர்களோ..??

Thamira said...

ரசனை மிகுந்த கவிதைகள்.!

priyamudanprabu said...

 ஒவ்வொரு வரியிலும்
கறைப்படியும் உன்
நினைவுகளைச்
சொல்ல வரும் கவிதை
இறக்கிறதா ? பிறக்கிறதா?
..........

அழகா இருக்கு

ரகசிய சிநேகிதி said...

==================================
Saravana Kumar MSK said..
என்ன மேகா.. ரொம்ப சோகமான கவிதைகளாகவே இருக்கே..??
===================================

என்ன செய்வது...சோகமான கவிதைகளைத் தான் விரும்பி எழுதச் சொல்கிறது மனம் .. இந்தக் கவிதைகள் தங்களைச் சோகத்தில் ஆழ்த்தியிருந்தால்.. மன்னியுங்கள்..

ரகசிய சிநேகிதி said...

===================================
நவீன் ப்ரகாஷ் said...
//ஒவ்வொரு வரியிலும்
கறைப்படியும் உன்
நினைவுகளைச்
சொல்ல வரும் கவிதை
இறக்கிறதா ? பிறக்கிறதா? //

என்ன கோபம் ரகசிய ஸ்னேகிதி..? :))

பிறந்த உறவுக்கு இறப்பும்
உண்டென கூற வருகிறீர்களோ..??
===================================

வலிகளைக் கொடுக்கும் நினைவுகளால் இறக்கும் போது.. பிறக்கும் கவிதையின் தன்மை மீண்டும் இறக்கச் செய்கிறது...
கவிதைகள் - பிறக்கின்றன..
நினைவுகள்- மண் தோண்டி புதைக்கின்றன. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நவீன். மீண்டும் வாருங்கள்.

ரகசிய சிநேகிதி said...

==================================
தாமிரா said...
ரசனை மிகுந்த கவிதைகள்.!
===================================

முதல் வருகைக்கு மிக்க மகிச்சி, பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தாமிரா... மீண்டும் வருங்கள் !

ரகசிய சிநேகிதி said...

==================================
பிரபு said...
 ஒவ்வொரு வரியிலும்
கறைப்படியும் உன்
நினைவுகளைச்
சொல்ல வரும் கவிதை
இறக்கிறதா ? பிறக்கிறதா?
..........

அழகா இருக்கு
===================================

வருகைக்கு மகிழ்ச்சி, பின்னூட்டத்திற்கு என் நன்றி பிரபு.. மீண்டும் வாருங்கள்

நிலாரசிகன் said...

//ஒவ்வொரு வரியிலும்
கறைப்படியும் உன்
நினைவுகளைச்
சொல்ல வரும் கவிதை
இறக்கிறதா ? பிறக்கிறதா? //

மிகச்சிறந்த வரிகள்.

//கறைப்படியும்//
கறைபடியும்.

ரகசிய சிநேகிதி said...

===================================
நிலாரசிகன் said...
//ஒவ்வொரு வரியிலும்
கறைப்படியும் உன்
நினைவுகளைச்
சொல்ல வரும் கவிதை
இறக்கிறதா ? பிறக்கிறதா? //

மிகச்சிறந்த வரிகள்.
===================================

====> வருகைக்கும் கருத்திற்கும் மிக்க மகிழ்ச்சி..மீண்டும் வாருங்கள்

====================
(//கறைப்படியும்//
கறைபடியும்.)
====================
===> பிழையைத் திருத்தியதற்கு மிக்க நன்றி..

அமிர்தவர்ஷினி அம்மா said...

மனசாட்சியை விலங்கிட்டு
கடவுளைச் சிறைட்ட
உன் ரேகையில் பதிந்து
கிடந்தது ஒரு வாசகம்
துரோகம் என்று

:)))))))

வரலாற்றில் இன்று!!! said...

கறைபடிந்த நினைவுகள்
கரயவைது விட்டது மனதை...