BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Tuesday, August 19, 2008

ஏய் மழையே



துளிகள் எல்லாம் தூரிகையாய்
மேனியெங்கும் மெல்ல வருடி
மேகம் வரைந்த ஓவியங்கள்
வெட்கத்தில் சிவக்க

கோலமிடும் பாதத்தில்
ஈரம் கொண்ட மருதாணி
நாணத்தில் சேர்ந்து நிறக்க

உன்னில் கரையும் என்னை
கொஞ்சம் காதலித்துப் போ
வெள்ளித் துளியே

நனையும் பருவத்தை
நாளையும் தருவதாய்
என் தேகமெங்கும்
மெய் எழுதிப் போ
வெள்ளை மையில்

13 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

சிறப்பான கவிதை... வாழ்த்துக்கள்... வெள்ளித் துளிகள் தூரிகைகளாக வந்தக் கற்பனை நன்று...

MSK / Saravana said...

மழையும் அழகு.. காதலும் அழகு..

:)
:)
:)கலக்கல்

ரகசிய சிநேகிதி said...

================================
VIKNESHWARAN said...
சிறப்பான கவிதை... வாழ்த்துக்கள்... வெள்ளித் துளிகள் தூரிகைகளாக வந்தக் கற்பனை நன்று...
==================================
===> நன்றி விக்னேஸ்வரன்..மீண்டும் வாருங்கள்.

ரகசிய சிநேகிதி said...

================================
M.Saravana Kumar said...
மழையும் அழகு.. காதலும் அழகு..

:)
:)
:)கலக்கல்
=================================
===> நன்றி சரவணக்குமார். .. இந்தக் கவிதை உங்களை மூன்று முறை சிரிக்க வைத்ததா? :)

ஜியா said...

kalakkal kavithai...

//வெள்ளை மையில்// ??
'நிறமற்ற மையில்'னா இன்னும் நல்லா பொருந்திருக்குமா??

Divya said...

மிக மிக அழகான வரிகள்......வாழ்த்துக்கள்,

உங்கள் கவிதைகள் அனைத்துமே ரொம்ப நல்லாயிருக்கு:))

ரகசிய சிநேகிதி said...

===================================ஜி said...
kalakkal kavithai...

//வெள்ளை மையில்// ??
'நிறமற்ற மையில்'னா இன்னும் நல்லா பொருந்திருக்குமா??

===================================

=====> வாங்க ஜி. மழைத்துளிகள் கண்களுக்கு வெள்ளையாகத் தெரிவதால். வெள்ளை மை என்று குறிப்பிட்டுள்ளேன். உண்மையில் அவை நிறமற்றதாக இருந்தாலும். உங்களின் வரிகளும் ஏற்கக் கூடியதே. மீண்டும் வாருங்கள் ஜி.

ரகசிய சிநேகிதி said...

=================================
Divya said...
மிக மிக அழகான வரிகள்......வாழ்த்துக்கள்,

உங்கள் கவிதைகள் அனைத்துமே ரொம்ப நல்லாயிருக்கு:))
==================================
=====> வாங்க திவ்யா.. கருத்திற்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி .. மீண்டும் வாருங்கள்.. :)

M.Rishan Shareef said...

கவிதை அருமை.

//நனையும் பருவத்தை
நாளையும் தருவதாய்

என் தேகமெங்கும்
மெய் எழுதிப் போ
வெள்ளை மையில் //

இதே வரத்தைத்தான் எந்நாளும் வேண்டுகிறோம். மழையையும் மாறாப்பருவத்தையும் அதுதரும் குதூகலத்தையும் நிரந்தரமாக வேண்டுகிறோம்.

//நாணத்தில் சேர்ந்து நிறக்க //

நிறைக்க ? அல்லது நிறம் சேர்க்க ?

ரகசிய சிநேகிதி said...

உங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. இன்று நாம் வாழ்கின்ற நாட்களே நிரந்த்திரமற்ற போது இந்த மழை மட்டும் எப்படி நிரந்திரமாகிப் போகும். இருப்பினும் உங்கள் எண்ணம் நிறைவேற இறைவன் தான் அருள் புரிய வேண்டும்.

"கோலமிடும் பாதத்தில்
ஈரம் கொண்ட மருதாணி
நாணத்தில் சேர்ந்து நிறக்க" ( நிறம் சேர்க்க தான் )


மீண்டும் வாருங்கள்..

priyamudanprabu said...

உன்னில் கரையும் என்னை
கொஞ்சம் காதலித்துப் போ
வெள்ளித் துளியே

//////////

அழகு
அழகோ அழகு

Venkata Ramanan S said...

azhagu :)

யாரோ said...

//உன்னில் கரையும் என்னை
கொஞ்சம் காதலித்துப் போ
வெள்ளித் துளியே//
அழகான கற்பனை...உங்கள் புனை பெயரில் உங்கள் ரசனை தெரிகிறது ...வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுதுங்கள்... நானும் ஒரு வலைபூ வளர்க்கிறேன் பாருங்களேன் ..
valaikkulmazhai.wordpress.com
-கார்த்தி