BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Tuesday, July 20, 2010

காலச் சிலுவைகள்



கடிக்கார முட்கள்
விஷமாகி கொண்டிருக்கின்றன
காத்திருத்தலின் வலிகளோடு;
இதயம் நுழைந்து
விழி சேராது ப்பிரியங்களில்
நிறைந்து நீள்கிறது
நிலாக்கள் அற்ற இரவுகள்

கூடுகள் காணாத பறவையென
நம்மிருப்பு
நாட்களின் நகர்வுகளில்
நரகமாகி கிடக்க
நிகழ்காலங்களை விற்று
எதிர்காலத்திற்குள்
இறந்து கிடக்கிறோம்
வண்ணத்துப்பூச்சிகளாய்

நீ நீயாக நான் நானாக
யாரும் அறியா வண்ணம்
கண்ணீர் துளிகளுக்குள்
இன்னும் எழுதப்படாத
நம் கடிதங்களின்
கடைசி வார்த்தைகளில்
என்றும் அன்புடன்
நான் உனக்காக

3 comments:

Senthil Prabu said...

தோழி,
நல்லா இருக்கு!!
//இதயம் நுழைந்து
விழி சேராது ப்பிரியங்களில்//

//நிகழ்காலங்களை விற்று
எதிர்காலத்திற்குள்
இறந்து கிடக்கிறோம்
வண்ணத்துப்பூச்சிகளாய்//

//கடைசி வார்த்தைகளில்
என்றும் அன்புடன்
நான் உனக்காக//

வாழ்த்துக்கள்!!

Senthil Prabu said...

kavidhai-ku yetdra padamum arumai!!

Unknown said...

Kahidham kooda kanneer vadithathu!...
Athil un kavithaiyai naan varaintha poluthu...