BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Wednesday, July 28, 2010

அபாயக் குறிகளோடு அவள் நெருங்குகிறாள்



ஒற்றைக் காடொன்றைத் தேடுகிறேன்
கண்ணாடி ஒளிரும் மரங்களுக்குள்
நகர வீதியில் நச்சுவாயூ
உயிரற்ற ஊர்வனங்களோடு

நான்கு சுவருக்குள் கரியமிலவாயு
நான் சுவாசிக்க மீண்டு திரும்புகிறது
உனது பிராணமாக

உன் நாசி துவாரங்களில்
துளையிட்டு நுழையும்
என் மூச்சு
உனது நுரையீரல்களில்
கலந்து கசிக்கிறது
காண்ணாடி பேழைக்குள்
குளு குளு கருவியோடு
மூச்சும்; பேச்சும் இயந்திரமாகி
மூலைக்கொன்றாய் கிடக்கிறோம்

வயிறு பிழைக்க ;வாழ்வு தழைக்க
மருந்திட்ட தட்டான்களாய்
மாறிப் போயிருக்கும் நம் தேகம்
துர்தேவதைகளின் வாசத்தை
ஆணும் பெண்ணுமாய்
உடலெங்கும்
தெளித்து; நுகர்ந்து பூசிக்கொள்ள
அழுகி கொண்டிருக்கிறது
நிலவு பூமி

பதறி துடிக்கிறாள்
இயற்கை அன்னை
பாவம் தன் கற்பு
களவாடப்பட்டுகொண்டிருக்கிறதென்று
யாருக்கும் கவலையில்லை
யாரும் கேட்பதும் இல்லை
அழுது ஓலமிடும்
அவளது கதறலை

சிதைந்த உடலோடு
சீற்றம் கொண்ட அரக்கியாய்
உருக்கொள்ள தொடங்கியிருக்கிறாள்
ஆயுதம் வீசி
அவ்வப்போது சில
அபாயக் குறிகளோடு

இப்போழுது கேட்க
தொடங்கியிருக்கின்றன
உங்களின் ஓலங்கள்
அவரவர் வீடுகளில்

இன்று அவளது செவிகள்
ஊனமாக்கப்பட்டிருப்பதை
மறந்து

1 comments:

அஷ்வின் நாரயணசாமி said...

தோழி உங்களின் கடந்த மூன்று பதிவுகளை இன்று தான் படித்தேன்.. அனனத்தும் அருமை..தொடர்ந்து எழுதுங்கள்