BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Friday, August 15, 2008

கொலை முயற்சி




அன்றே
நான் இறந்ததாய்
சில மலர்
வளையங்களைச்
செலுத்தி இருப்பாய்
இன்னும் பெயரிடாதாய்
அந்தக் கல்லறைகளில்
அங்கே என்னைத்
தேடியும்
தொலைத்திருப்பாய்
தீராத சந்தேகம்
தீர்க்க வரும்
தேடல்களில்

வார்த்தைகளால்
என் உடலெங்கும்
பிரம்ம அஸ்திரங்கள்
தொடுக்கவும்
முயற்சிக்கிறாய்

அவை
என் இறப்பை
உறுதி செய்ததாய்
மீண்டுமொரு நிம்மதி
பெரும் மூச்சுக்
கொள்கிறாய்
இறந்து பிறக்கும்
என் காதலில்!

14 comments:

Anonymous said...

மரணம்கூட சில நேரங்களில் சுகமானது தோழி உயிரைக் கசக்கிப் பிழியும் காதலை விட!

Anonymous said...

உங்க எல்லா கவிதயும் படித்து இரசித்தேன். நீங்களும் ஈப்போவா?

ரகசிய சிநேகிதி said...

உண்மை தான் . சிலரின் சொற்களுக்கும் மரணத் தன்மை உண்டு என்பது தான் கவிதையின் கரு புனிதா. மீண்டும் வாருங்கள் தோழி.

MSK / Saravana said...

ரொம்ப ரொம்ப வலிக்கும்படியான கவிதை..

VIKNESHWARAN ADAKKALAM said...

நன்கு உள்ளது...

ச.பிரேம்குமார் said...

நல்ல வார்த்தை தேர்வுகள். வாழ்த்துக்கள் சிநேகிதி

Ravishna said...

It is nice.

--ravishna

ரகசிய சிநேகிதி said...

=================================
M.Saravana Kumar said...
ரொம்ப ரொம்ப வலிக்கும்படியான கவிதை..
=================================
=======> என் கவிதையின் வெற்றி உங்கள் கருத்து சொல்லும் வரிகளில்.. நன்றி சரவணக் குமார்

ரகசிய சிநேகிதி said...

===================================
பிரேம்குமார் said...
நல்ல வார்த்தை தேர்வுகள். வாழ்த்துக்கள் சிநேகிதி
===================================
நன்றி. பிரேம் குமார் மீண்டும் வாருங்கள். :)

பொ.வெண்மணிச் செல்வன் said...

maranikka seyyum kelvikalaiyum vaarthaikalaiyum veesukinra, avaikalukku aathiyaay santhekaththaiyum kondirukkum uravu onrirkaaka uyirtheluthal avasiyama? natpum kathalum uravum vaazhkaip payanaththai vasathi seythu kollum pakirvukalthane!? piraken suyamilakka vendum? kallaraiyil malaronrai vaiththu vittu payanaththai thodara sirakai virikkum paravaikalukkaka vanam vazhukkalai serththu vaiththirukkum!

ரகசிய சிநேகிதி said...

===============================
* VIKNESHWARAN said...
நன்கு உள்ளது...

* Ravishna said...
It is nice.
===============================
=====> உங்கள் கருத்துக்கு எனது நன்றிகள் .. மிக்க மகிழ்ச்சி விக்னேஸ்வரன் மற்றும் ரவிஸ்னா.. மீண்டும் இங்கு வருகைப் புரியுங்கள்..

ரகசிய சிநேகிதி said...

===================================
Venmani said...
maranikka seyyum kelvikalaiyum vaarthaikalaiyum veesukinra, avaikalukku aathiyaay santhekaththaiyum kondirukkum uravu onrirkaaka uyirtheluthal avasiyama? natpum kathalum uravum vaazhkaip payanaththai vasathi seythu kollum pakirvukalthane!? piraken suyamilakka vendum? kallaraiyil malaronrai vaiththu vittu payanaththai thodara sirakai virikkum paravaikalukkaka vanam vazhukkalai serththu vaiththirukkum!
===================================

======> உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெண்மனி. உறவுகள் காயப்படுத்தினாலும் பிரிந்து சென்றாலும், அங்கு நிலையாய் இருப்பது நாம் உறவுகள் மீது செலுத்திய அன்பே. அவை வேறு எதையும் கேட்பதில்லை, அவை மீண்டும் மீண்டும் உயிர்தெழும் தன்மை கொண்டதே என்பதை இக்கவிதையில் சொல்ல முயல்கிறேன். அன்பு, அன்பிற்காகவே இறக்கும்; அன்பிற்காகவே பிறக்கும். மீண்டும் வாருங்கள்... :)

பொ.வெண்மணிச் செல்வன் said...

அங்கு நிலையாய் இருப்பது நாம் உறவுகள் மீது செலுத்திய அன்பே. அவை ""வேறு எதையும் கேட்பதில்லை""

அன்பு, ""அன்பிற்காகவே"" இறக்கும்; ""அன்பிற்காகவே"" பிறக்கும்.


இன்னுமொரு ஒத்த குரல்!
http://mrishanshareef.blogspot.com/2008/07/blog-post.html

செலுத்தும் அன்பிற்கு பிரதிபலனாய் அன்புதான் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அங்கீகாரமாவது இருக்க வேண்டும். வெறும் பரிகாசமும், குத்திக் கிழிக்கும் தாக்குதல்களும், வழியும் ரத்தத்தை ருசிக்கும் நாக்கும் மட்டுமே கிடைக்குமெனில்.....ம்ம்ம்ம்...எனக்கு ஏனோ ஒப்பவில்லை.

எப்பொழுதோ படித்த ருஷ்ய கவிதை, வார்த்தைகளும் வரிகளும் ஞாபகமில்லை! சாரம் மட்டும் நினைவிலினிக்கிறது!
"எனக்காக எதையும் செய்வாயா?
எனக்காக எல்லவற்றையும்
விட்டுக் கொடுப்பாயா?
எனக்காக உன் சுயமனைத்தையும்
விட்டு விட சம்மதமா?
எனக்காக உன் உயிரையும் கொடுப்பாயா?
மன்னித்து விடு!
என்னால் ஒரு
அடிமையை காதலிக்க முடியாது! "


இது போன்ற கவிதைகளைப் படித்ததால்தானோ என்னவோ எனக்கு ஒப்பவில்லை. தேவையில்லாமல் நீளமாய் பேசுகிறேன். மன்னிக்கவும்!
தங்களின் கவிதை பேசும் விஷயம் பற்றி பேசும் ஆர்வத்தில் கவிதையைப் பற்றி பேச மறந்து விட்டேன். வார்த்தை தேர்வு மிக நன்றாயிருக்கிறது. கவிதையின் பூடகமான தொடக்கமும் இயல்பான பயனமும் ரசனைக்குறியதாயிருக்கிறது! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

ரகசிய சிநேகிதி said...

திரு. வெண்மணி அவர்கட்கு,

அன்பிற்கு பிரதிபலனாய் அன்பு கிடைக்காத போது, கவிதை வரிகளிலாவது தன் அன்பைத் தேடி தொலைக்கும் மனதின் பிரதிபலிப்பைச் சொல்ல முயலும் இந்தக் கவிதையில் அன்பைப் பற்றி தங்களின் கருத்து அதுவாக இருப்பின் எனக்கொன்றும் மறுப்பில்லை. மன்னிப்பு கேட்பதற்கு தாங்கள் பெரிதாக தவறொன்றும் செய்துவிடவுமில்லை. இம்மாதிரியான விமர்சனங்களையே என் மற்ற கவிதைகளுக்கும் எதிர்ப்பார்க்கின்றேன். இந்தக் கவிதையோடு ஒத்திருக்கும் எம்.ரிஷான் ஷெரீபின் "எரிகிறேன் எரிகிறேன்" என்ற கவிதையை இங்கே பகிர்ந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. அந்த ரஷ்ய கவிதையின் சாரம் நன்று. என் நன்றிகள். இந்த விமர்சனத்தை முழு மனதோடு ஏற்கிறேன். மீண்டும் வாருங்கள். :)