BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Wednesday, June 24, 2009

இவள்=காகிதப்பூ


காற்றால் கிழிக்கப்பட்டு
கைகளால் நசுக்கப்பட்டு
வீசும் போது எல்லாம்
திசைகள் அறியா
செல்வதும்; கால்களால்
மிதிப்படுவதுமாய்
பிறவி கோலம்
இதுவென தொடர்வதும்
செய்த தீய்வினை தான்
என்ன ?
தீர்ப்பெழுதிய பேனாக்களில்
உடைந்து கிடக்கிறது
காகிதப் பூவிற்கான பதில்
புறம் தள்ளி வைக்கிறது
பூஜை அறை விதி

4 comments:

யாத்ரா said...

அருமை மேகா,

//செய்த தீய்வினை தான்
என்ன ?//

//புறம் தள்ளி வைக்கிறது
பூஜை அறை விதி//

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க பா.


//தீர்ப்பெழுதிய பேனாக்களில்//

இந்த வரி படிச்சவுடனே, எங்க அம்மா எப்பவோ படிச்ச கண்ணதாசன் கவிதை ஒன்றை சொன்னது ஞாபகம் வருது.

தாலிக்கு அரும்பெடுத்த
தட்டானுக்குக் கண் குருடோ
சேலைக்கு நூலெடுத்த
சேனியனுக்கு கண் குருடோ
பஞ்சாங்கம் பார்க்க வந்த
பார்ப்பனுக்கு எண் குருடோ
எழுதியவனுக்குத் தான் கண் குருடோ
எழுத்தாணி கூரில்லையோ

எங்க அம்மா சொன்னதுனால இந்தக் கவிதை அப்படியே மனதில் நின்றுவிட்டது.

butterfly Surya said...

அருமை..

வாழ்த்துகள்.

யாத்ரா சொன்ன கண்ணதாசன் கவிதையும் அருமை.

நன்றி நண்பரே..

Ravishna said...

உங்கள் வரிகளின் பின்னால் இருக்கும் சோகங்கள் அனைத்தும் நன்கு புரிகிறது. நன் கவிதை எழுதுவதை நிறுத்தியதற்கு இது போன்ற காரணங்களும் உண்டு. நன் யாருக்காக கவிதை எழுதுவதை நிறுத்தினேனோ, அவர்கள் என்னுடனும் எனக்காகவும் இப்பொழுது இல்லை. உங்கள் கவிதைகளை படிக்கும்போது நான் என்னை நினைத்து சில நிமிடங்கள் சிரித்து விடுவேன்.

நட்புடன்,
ரவிஷ்னா

s.mani said...

மெண்மையான உணர்வு....
அருமை!!!