BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Wednesday, June 17, 2009

ஒரு நிழலின் கதை


நிழல் கொடுத்த இலைகள்
இங்கு விலகிக் கொண்டன
நிழல் மட்டும் எரிகிறது
மணற்தரையில்


இலை உதிரும்
பின் இடம்பெயரும்
என்பதை மறந்த நிழல்
காத்திருக்கிறது
தன்னைப் போன்ற பிற
நிழல்களின் நிழல்களோடு
அதனிலைகளின் கதையோடு



அவைகளும் இல்லாமல் போகும்
இருள் சூழூம்
இல்லை
மழை இந்த மண்ணைக்
கவ்வும்
என்பதை உணர மறந்து
காத்திருக்கிறது கடந்து போன
பாதங்களுக்கான கால்மிதியாய்



கடலில் காலச் சூரியன்
உறங்கி போன பின்னும்
இருள் உறவாக வந்த பின்னும்
காத்திருக்கிறது
இங்கு எப்போதும்
இலையுதிர் காலம்
என்பதை நினைவில் இழந்து
நிலையாகிறது நிழலங்கு

3 comments:

நிலாரசிகன் said...

//நீங்கள் இங்கு வந்ததிற்கான தடயங்களை எண்ணங்களாக விட்டு செல்லுங்கள் நண்பர்களே... உங்களில் வருகை வரவேற்கப்படுகிறது. நன்றி !
//

நிழலின் கதைக்கு வாழ்த்துகள்.

ச. ராமானுசம் said...

ஆழ்ந்த சிந்தனை ..
அருமையான படைப்பு
வாழ்த்துக்கள்

யாத்ரா said...

கவிதை முழுதுமே அருமை.

\\இலை உதிரும்
பின் இடம்பெயரும்
என்பதை மறந்த நிழல்
காத்திருக்கிறது
தன்னைப் போன்ற பிற
நிழல்களின் நிழல்களோடு அதனிலைகளின் கதையோடு

அவைகளும் இல்லாமல் போகும்
இருள் சூழூம்\\

மேற்கண்ட வரிகள் மிக அருமை. முந்தைய கவிதைகளையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன், கவிதைகள் மிகவும் பிடித்திருக்கிறது.