BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Tuesday, March 3, 2009

ஓர் அக்னி இரவு

ஓர் அக்னி இரவில்
தோன்றிய கனவு
கதற கதற
நெரிக்கப் பட்டது கழுத்து
விழிகளில் குருதி வழிய
உடலெங்கும் நக கீறல்கள்
பலத்தக் காயத்திற்கு உட்பட்ட
உடல் மீது எறியப்பட்டது
திரவமொன்று

கனவில் பொசுங்கிய நான்
இறுதி சடங்கில் மௌனமாய்
உன் கைகளைப் பற்றி பிரிய

அவசர அவசரமாய்
எரியூட்டி போக
வருகிறாய் நீ
நான் விழிப்பதற்குள்

11 comments:

நட்புடன் ஜமால் said...

\\அவசர அவசரமாய்
எரியூட்டி போக
வருகிறாய் நீ
நான் விழிப்பதற்குள்\\

மிக அருமை.

நிலாரசிகன் said...

மிகச்சிறந்த கவிதை. வாழ்த்துகள்.

ஜீவா said...

கவிதையை இன்னும் முழுதாக படிக்கவில்லை . படித்தவுடன் விரிவாக பின்னுட்டம் இடுகிறேன்

ரகசிய சிநேகிதி---- அட்டகாசமான பெயர் இதுங்க அதுக்குதான் இந்த பின்னுட்டம்

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

கவிதை ரொம்ப பிடித்திருக்கின்றது...

Ravishna said...

It is good. Congrats and all the best.


Friendly,
Ravishna

இப்னு ஹம்துன் said...

நல்லாருக்குங்க!

ஆனா, "நெரிக்கப் பட்டது" ஏன் துண்டாயிடுச்சு?

புதியவன் said...

//அவசர அவசரமாய்
எரியூட்டி போக
வருகிறாய் நீ
நான் விழிப்பதற்குள்//

உணர்வின் வெளிப்பாடு அருமை...

அஷ்வின் நாரயணசாமி said...

பாரதி கண்ட புதுமை பெண் நீங்கதாங்க நினைக்கிறேன்.... வாழ்த்துகள்...

Sublime Remembrance said...

Love it ! I am a big fan of urs for life!

உயிரோடை said...

//இறுதி சடங்கில் மௌனமாய் உன் கைகளைப் பற்றி பிரிய //

இப்படியொரு அன்பா?

Sakthi said...

really it speaks a lot