BLOGGER TEMPLATES - TWITTER BACKGROUNDS »

Monday, January 19, 2009

அந்தி



சில்லென்ற நதியில்
சிணுங்கும் தென்றல்
கலகலவென இலைகள்
சிரிக்க…

திட்டு திட்டாய்
பாதச் சுவடுகள்
பட்டும் படாமல்
ஏந்தி நிற்கும் மணல்வெளி

வெயிலின் விழிகள் பட்டு
வெட்கத்தில் சிவந்த கன்னம்
மௌனமாய் விடைபெறும்
நேரமிது

பகலும் இல்லை
இரவும் இல்லை
அழகான அந்தி என்றேன்
அழகே உன்னைக் கணடு

11 comments:

நட்புடன் ஜமால் said...

அருமையா இருக்கு வரிகள்

\\பகலும் இல்லை
இரவும் இல்லை
அழகான அந்தி என்றேன்
அழகே உன்னைக் கணடு\\

இது மிக அருமை ...

நட்புடன் ஜமால் said...

நீண்ட நாட்களுக்கு பின் தங்கள் வருகை அழகான கவிதையோடு ...

வாழ்த்துக்கள் ...

ரகசிய சிநேகிதி said...

==================================
நட்புடன் ஜமால் said...
அருமையா இருக்கு வரிகள்
================================>>
உங்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி ஜமால்.. தங்களின் முதல் பின்னூட்டத்திற்கு என் நன்றிகள்..மீண்டும் வாருங்கள் ..

நவீன் ப்ரகாஷ் said...

//வெயிலின் விழிகள் பட்டு
வெட்கத்தில் சிவந்த கன்னம்
மௌனமாய் விடைபெறும்
நேரமிது //

உவமையும் கவிதையும் கொள்ளை அழகு சிநேகிதி.. :))

Sanjai Gandhi said...

//பகலும் இல்லை
இரவும் இல்லை
அழகான அந்தி என்றேன்
அழகே உன்னைக் கணடு //

ரசித்தேன்.. :)

MSK / Saravana said...

குளிர்ச்சியான கவிதைகள்..??

அழகா இருக்கு தோழி.. :)

MSK / Saravana said...

ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க.. இனி தொடர்ச்சியாக கவிதை பதிவுகள் எழுதவும்..

ரகசிய சிநேகிதி said...

========================================
நவீன் ப்ரகாஷ் said...
//வெயிலின் விழிகள் பட்டு
வெட்கத்தில் சிவந்த கன்னம்
மௌனமாய் விடைபெறும்
நேரமிது //

உவமையும் கவிதையும் கொள்ளை அழகு சிநேகிதி.. :))
========================================
=======> கவிதையை நீங்கள் ரசித்த விதமும் அழகு தான்... மீண்டும் வாருங்கள் நவீன்.. :-)

ரகசிய சிநேகிதி said...

========================================
SanJaiGan:-Dhi said...
//பகலும் இல்லை
இரவும் இல்லை
அழகான அந்தி என்றேன்
அழகே உன்னைக் கணடு //

ரசித்தேன்.. :)
========================================
====> தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.. மீண்டும் வாருங்கள் நண்பரே...

ரகசிய சிநேகிதி said...

========================================
========================================
Saravana Kumar MSK said...
குளிர்ச்சியான கவிதைகள்..??

அழகா இருக்கு தோழி.. :)

ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க.. இனி தொடர்ச்சியாக கவிதை பதிவுகள் எழுதவும்..
========================================
=======> தங்களின் வருகைக்கும் பின்னூடத்திற்கும் மிக்க மகிழ்ச்சி சரவணக் குமார்..
இனி தொடர்ந்து கவிதைகளை எழுத முயற்ச்சிக்கிறேன்.. மிக்க நன்றி... மீண்டும் வாருங்கள்..

புதியவன் said...

//வெயிலின் விழிகள் பட்டு
வெட்கத்தில் சிவந்த கன்னம்
மௌனமாய் விடைபெறும்
நேரமிது//

வாவ்...அழகிய சொல்லாடல்...