Friday, October 17, 2008

விட்டு சென்ற வார்த்தைகள்



பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
உன் பழைய வார்த்தைகளை
என் கண்ணாடி பேழைக்குள்

உடையும் தருணங்களில்
சேர்க்கும் விரல்களாய்
விழிக்கும் பொழுதெல்லாம்
படுக்கை அருகே கிடத்தி வைக்கிறேன்

நெஞ்சின் நடுவே சுழன்று கொண்டு
நிற்கும் இடமெல்லாம் நினைத்து கொண்டு
வழி நெடுகிலும் விழுந்து கிடைக்க
இன்னொரு உயிராய்
உன்னை நானே ஏந்தி செல்ல
என்னுள் நானே செதுக்கி வைக்கிறேன்

நட்சத்திரங்கள் எரிந்த போன இரவிலும்
நிலாக்கள் மரிந்து போன அறையிலும்
உன்னோடு நான் மட்டும் பேசிக்கொள்ள
இருட்டு பிரசவத்தில்
இதயத்தில் ஈன்றெடுக்கிறேன்

எல்லாம் கடந்த பின்னும்
விரும்பியே கொன்ற பின்னும்
புதுப்பித்து புதுப்பித்து என்னுள்
புதைத்து வைக்கிறேன்
நேசம் கொள்ள நாளெல்லாம்

11 comments:

Saravana Kumar MSK said...

விட்டு சென்ற வார்த்தைகள்-களின் வலி மிக அதிகம் மேகா..

சிம்பா said...

மொத வாடி இங்க வர்றேன். அதனால..

//நட்சத்திரங்கள் எரிந்த போன இரவிலும்
நிலாக்கள் மரிந்து போன அறையிலும்
உன்னோடு நான் மட்டும் பேசிக்கொள்ள
இருட்டு பிரசவத்தில்
இதயத்தில் ஈன்றெடுக்கிறேன்//

இந்த வரிகள் அருமையா இருக்கு... ஆனா ''நிலாக்கள் மரிந்து போன அறையிலும்'' இந்த வரிக்குத்தான் அர்த்தம் புரியல..

ஆனா சோகமா இருக்குங்க.. ஆனாலும் நல்லா இருக்கு..

Ravishna said...

/*எல்லாம் கடந்த பின்னும்
விரும்பியே கொன்ற பின்னும்
புதுப்பித்து புதுப்பித்து என்னுள்புதைத்து வைக்கிறேன்
நேசம் கொள்ள நாளெல்லாம் */

வரிகள் அருமை.....
அதனினும் அருமை உங்கள் சோகத்தை
எடுத்து கூறும் விதம்.....

ஏன் மேஹா சோகங்கள் நிறைய சூழ்ந்து விட்டனவா???
ஒரு காலத்தில் நானும் இவ்வாறு தான் இருந்தேன்..
இன்று என்னை நானே மாற்றிக் கொண்டேன்....
கோபம் வரும் நேரத்திலும் சோகம் வரும் நேரத்திலும்
நன்கு கல கல என்று சிரித்து விடுங்கள்....
சோகம்,கோபம் எல்லாம் எங்கோ மறைந்து விடும்....

ஒரு முறை முயற்சி செய்து தான் பாருங்களேன் இந்த ரவிஷ்னாவுக்காக......

நன்றியுடன்,
ரவிஷ்னா

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//நட்சத்திரங்கள் எரிந்த போன இரவிலும்
நிலாக்கள் மரிந்து போன அறையிலும்
உன்னோடு நான் மட்டும் பேசிக்கொள்ள
இருட்டு பிரசவத்தில்
இதயத்தில் ஈன்றெடுக்கிறேன்//

மிக அருமையான வரிகள்!!!

ரகசிய சிநேகிதி said...

==================================
Saravana Kumar MSK said...
விட்டு சென்ற வார்த்தைகள்-களின் வலி மிக அதிகம் மேகா..
==================================
====> வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சரவணக் குமார். மீண்டும் வாருங்கள்

ரகசிய சிநேகிதி said...

===================================
சிம்பா said...
மொத வாடி இங்க வர்றேன்.

சோகமா இருக்குங்க.. ஆனாலும் நல்லா இருக்கு..
===================================
=====> முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சிம்பா. மீண்டும் வாருங்கள்

ரகசிய சிநேகிதி said...

===================================
Ravishna said...

வரிகள் அருமை.....
அதனினும் அருமை உங்கள் சோகத்தை
எடுத்து கூறும் விதம்.....
===================================
=====> வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரவிஸ்னா. மீண்டும் வாருங்கள்

ரகசிய சிநேகிதி said...

===================================சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...
//நட்சத்திரங்கள் எரிந்த போன இரவிலும்
நிலாக்கள் மரிந்து போன அறையிலும்
உன்னோடு நான் மட்டும் பேசிக்கொள்ள
இருட்டு பிரசவத்தில்
இதயத்தில் ஈன்றெடுக்கிறேன்//

மிக அருமையான வரிகள்!!!
===================================
=======> முதல் வருகைக்கு மகிழ்ச்சி சுடர்மணி. கருத்திற்கு மிக்க நன்றி. மீண்டும் வாருங்கள்

ஜி said...

வலியில் முக்கியெடுத்த வரிகளின் கோர்வை... அருமையென்ற ஒற்றைச்சொல் மட்டுமே இருப்பிலிப்போது...

அமிர்தவர்ஷினி அம்மா said...

விரும்பியே கொன்ற பின்னும்

ரொம்ப நல்லா இருக்கு. வலிக்கிறது.

TAMIL POEMS said...

"எல்லாம் கடந்த பின்னும்
விரும்பியே கொன்ற பின்னும்
புதுப்பித்து புதுப்பித்து என்னுள்
புதைத்து வைக்கிறேன்"

தனியே அமர்ந்து படித்தால் கண்ணீர் வரும்..